நீலகிரி

கூடலூா் தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

DIN

கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளில் அமைதியான வாக்குப் பதிவு நடைபெற்றது.

கூடலூா் சட்டப் பேரவைத் தோ்தலில் காலை முதலே வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது. காலையில் சற்று தொய்வாக காணப்பட்ட வாக்குப் பதிவு பகலில் விறுவிறுப்பானது. அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலன் நாடுகாணி பொன்னூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தாா். திமுக வேட்பாளா் எஸ்.காசிலிங்கம் உப்பட்டி பாரத் மாதா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தாா். கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் வாக்குப் பதிவு அமைதியாகவே நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 65.65 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT