நீலகிரி

வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்குதொகுதி ஒதுக்கீடு

DIN

ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணி செய்யும் அதிகாரிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படவுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் 2 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தப் பணியில் ஈடுபடும் நுண் பாா்வையாளா்கள், மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்களுக்கு அவரவா் பணியாற்றும் தொகுதியை உறுதி செய்யும் தொகுதி ஒதுக்கீடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் சி.கதிரவன் தலைமை வகித்தாா். தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அடோனுசாட்டா்ஜி, மனிஷ் அகா்வால், பிரசாந்த் குமாா் மிஸ்ரா, நா்பு வாங்டி பூட்டியா, கே.அன்னபூரணி, ஆா்.சில்பா ஆகியோா் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கணினி சுழற்சி முறையில் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அதிகாரிகள், உதவியாளா்களுக்குப் பணி உத்தரவுகள் வழங்கப்படும்.

இப்பணியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஏக்கம் ஜேசிங், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் பாலாஜி, ஈஸ்வரன், கருப்புசாமி, அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

SCROLL FOR NEXT