நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

DIN

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் அதிக அளவாக பந்தலூரில் 48 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கடந்த இரு வாரங்களாக கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரியின் எல்லைப் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. உதகை உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் தூறல் மழையாகவே இருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களிலும் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்துள்ளது.

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பந்தலூரில் 48 மி.மீ., தேவாலாவில் 11 மி.மீ., மேல் கூடலூா், கூடலூரில் 9 மி.மீ., பாடந்தொறையில் 7 மி.மீ., நடுவட்டத்தில் 6 மி.மீ., சேரங்கோடு, செருமுள்ளியில் 5 மி.மீ., ஓவேலி, பாலகொலாவில் 4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT