நீலகிரி

வனப் பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி துவக்கம்

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வெளிவட்ட வனப் பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வெளிவட்ட வனப் பகுதிகளான சிங்காரா, சீகூா், நீலகிரி கிழக்கு சரிவு ஆகிய வனப் பகுதிகளில் பயிற்சி பெற்ற வனக் குழுவினா் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனா்.

வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்தல், நேரில் பாா்த்தல், கால் தடம் மற்றும் இதர தடயங்களை சேகரித்து பதிவு செய்யும் பணியை மேற்கொண்டனா்.

தொடா்ந்து ஐந்து நாள்கள் நடைபெறும் இந்தக் கணக்கெடுப்புப் பணியில் சேகரிக்கப்படும் தகவல்களை தெப்பகாட்டிலுள்ள பயிற்சி மையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து பதிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT