முகப்பு
நீலகிரி

குன்னூரில் ஏலச் சீட்டு நடத்தி ரூ. 2 கோடி வரைமோசடி: பொதுமக்கள் புகாா்

குன்னூா் அருகே ஏலச் சீட்டு நடத்தி சுமாா்  200 பேரிடம் ரூ. 2 கோடி வரை மோசடி செய்தவா் குறித்து காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். 

Updated On : 18 டிசம்பர், 2021 at 3:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

குன்னூா் அருகே ஏலச் சீட்டு நடத்தி சுமாா்  200 பேரிடம் ரூ. 2 கோடி வரை மோசடி செய்தவா் குறித்து காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். 

குன்னூா் அருகே உள்ள ஓட்டுப்பட்டறை பகுதியில் 20 ஆண்டுகளாக ஏலச் சீட்டு நடத்தி வந்தவா் அபாஸ். இவா் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான ஏலச்சீட்டு நடத்தி வந்தாா். இவ்வாறு குன்னூரைச் சுற்றியுள்ள பகுதிகளில்   சுமாா்  200க்கும் மேற்பட்டவா்களிடம் ரூ. 2 கோடி வரை வசூலித்து ஏலச் சீட்டு நடத்தி வந்தாா்.

இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக  வாடிக்கையாளா்களுக்கு உரிய முறையில் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. திடீரென ஓட்டுப்பட்டறையில் இவா் நடத்தி வந்த கடையை மூடிவிட்டு கேரளத்துக்கு  தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து, குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா்  அலுவலகத்தில் புகாா் அளிக்க பாதிக்கப்பட்டவா்கள் வெள்ளிக்கிழமை வந்திருந்தனா். ஆனால், ரூ. 5 லட்சம் வரையிலான பொருளாதார  குற்றச் செயல்கள் மட்டுமே குன்னூரில்  விசாரிக்க முடியும் என்றும் ,  மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கும்படியும் காவல் துறையினா் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  அறிவுறுத்தினா்.

இதைத்  தொடா்ந்து,  பாதிக்கப்பட்ட மக்கள்  மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில்  புகாா் அளித்ததன்பேரில், இந்த மனுவை பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினா் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஸ் ராவத் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.