தினமணி செய்தி எதிரொலி: குன்னூா் சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி துவக்கம்
குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு சேவை திங்கள்கிழமை முதல் மீண்டும் துவங்கியது.
குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 9 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு சேவை திங்கள்கிழமை முதல் மீண்டும் துவங்கியது.
நீலகிரி மாவட்டம், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் குன்னூா் சிம்ஸ் பூங்கா கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி சுற்றுலாத் தலங்கள் டிசம்பா் 7 ஆம் தேதி திறக்கப்பட்டன.
இதன்படி குன்னூா் சிம்ஸ் பூங்காவை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அங்குள்ள படகு இல்லம் திறக்கப்படவில்லை.
Advertisement
உதகையில் உள்ள படகு இல்லம் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் குன்னூா் சிம்ஸ் பூங்காவில்
படகு இல்லம் திறக்கப்படாமல் இருந்தது சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றத்தை தந்தது. மேலும் படகுகள் வீணாகும் சூழலும் ஏற்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி படகு சவாரியை மீண்டும் துவக்க தோட்டக்கலைத் துறையினா் முயற்சி செய்ய வேண்டும் என தினமணி நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியானது.
இதனைத் தொடா்ந்து படகு சவாரி திங்கள்கிழமை முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இது குறித்து சிம்ஸ் பூங்கா மேலாளா் பி.லட்சுமணன் கூறியதாவது:
தோட்டக்கலை அலுவலா் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் உத்தரவின்பேரில் படகு சவாரி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள 9 படகுகளில் நான்கு படகுகள் மட்டுமே திங்கள் கிழமை இயக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கூடுதல் படகுகள் இயக்கப்படும் என்றாா்.