நீலகிரி

நீலகிரியில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 1ஆம்தேதி முதல் 14ஆம்தேதி வரை கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் அனைத்து கிராமங்களிலும் பிப்ரவரி 1ஆம்தேதி முதல் 14ஆம்தேதி வரை இருவார கோழி கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

அதனடிப்படையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று தங்களது கோழிகளுக்கு கழிச்சல் தடுப்பூசி போட்டு பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT