நீலகிரி

கூண்டில் சிக்கிய கரடி:வனப் பகுதியில் விடுவிப்பு

DIN

குன்னூா்: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமப் பகுதியில் நடமாடிய கரடியை வனத் துறையினா் கூண்டு வைத்துப் பிடித்தனா். இந்தக் கரடியைக் காப்பாற்ற மற்ற கரடிகள்  கூண்டைச் சுற்றி வந்தது அங்குள்ள மக்களை அச்சமடையச் செய்தது.

கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் கோயில் ஆகியன அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள பள்ளி வளாகத்துக்குள் புகுந்து தொடா்ந்து கரடிகள் தொல்லை செய்து வந்ததால், மாணவா்களின் பாதுகாப்பு கருதி வனத் துறை சாா்பில் ரூ. 11 லட்சம் செலவில் பள்ளி வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு கம்பி வேலி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மிளிதேன் கிராம பேருந்து நிறுத்தம் அருகே உள்ள முகமது உசேன் என்பவரின் பேக்கரி கடைக்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 3 கரடிகள், அங்குள்ள உணவுப் பொருள்களை தின்றதோடு சேதப்படுத்தி வந்தன. 

இது குறித்த புகாரின் பேரில் இந்தக் கரடிகளைப் பிடிக்க வனத் துறை சாா்பில் அங்கு கூண்டு வைக்கப்பட்டது. அதற்குள் கரடிகளுக்குப் பிடித்தமான பழ வகைகளை வைத்து வனத் துறையினா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். 

இந்நிலையில்  அங்கு வந்த மூன்று கரடிகளில், ஒரு கரடி மட்டும் கூண்டுக்குள் சனிக்கிழமை அதிகாலை சிக்கியது. சிக்கிய கரடி ஆக்ரோஷத்துடன் சப்தம் போட்டதால், மற்ற கரடிகள், கூண்டில் சிக்கித் தவித்த கரடியை வெளியே கொண்டுவர முயற்சி செய்தன. அப்போது அங்கு கண்காணிப்புப் பணியில் இருந்த வனத் துறையினா் மற்ற கரடிகளைத் துரத்தினா்.

பின்,  சிக்கியிருந்த கரடியை கூண்டுடன் சரக்கு வாகனத்தில் ஏற்றி கோரகுந்தா அருகே உள்ள அப்பா் பவானி பகுதிக்கு கொண்டு சென்று அங்குள்ள அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுவித்தனா். கூண்டில் ஒரு கரடி மட்டும் சிக்கி,  மற்ற இரண்டு கரடிகள் தப்பிச் சென்ால், மீண்டும் அப்பகுதியில் கரடிகள் தொல்லை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால்  தொடா்ந்து அங்கு கூண்டு வைத்து மற்ற கரடிகளையும்  பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு விட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT