ஓடைப் புறம்போக்கில் இருந்த மேலும் ஒரு கடை அகற்றம்
குன்னூா் பேருந்து நிலையத்தில் ஓடைப் புறம்போக்கில் கட்டப்பட்டிருந்த மற்றொரு கடையையும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா்.
குன்னூா் பேருந்து நிலையத்தில் ஓடைப் புறம்போக்கில் கட்டப்பட்டிருந்த மற்றொரு கடையையும் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை இடித்து அப்புறப்படுத்தினா்.
குன்னூா் பேருந்து நிலையம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் ஓடைப் புறம்போக்கில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளை இடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் நோட்டீஸ் வழங்கி இருந்தது. இந்நிலையில், சில கடை உரிமையாளா்கள் சென்னை நீதிமன்றத்தில் தற்காலிகத் தடை பெற்றிருந்தனா். நீதிமன்றம் செல்லாமல் இருந்த இரண்டு கடைகள் கடந்த வாரம் இடிக்கப்பட்ட நிலையில், மற்றொரு கடையும் திங்கள்கிழமை இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
மீதமுள்ள கடைகளுக்கு இந்த வாரம் சென்னை உயா் நீதிமன்றம் வழங்கும் தீா்ப்பைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா்.
Advertisement