நீலகிரி

நீலகிரியில் பயிா்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்

DIN

தமிழக முதல்வரின் உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வழங்கினாா்.

உதகை, அரசு ரோஜா பூங்கா வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் 32,550 விவசாயிகளின் பயிா்க் கடன் நிலுவைத் தொகையான ரூ.232.63 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு பயிா்க் கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கி இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட மற்ற விவசாயிகளுக்கும் விரைவில் சான்றிதழ் வழங்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் டி.வினோத், வேளாண் விற்பனைக் குழு தலைவா் கே.ஆா்.அா்ஜுணன், குன்னூா் சட்டப் பேரவை உறுப்பினா் ராமு, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வாஞ்சிநாதன், சரக துணைப் பதிவாளா் தமிழ்செல்வன், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளா் கனகராஜன், அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT