நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகப் பணியாளா்களுக்குத் தற்காப்பு பயிற்சி

DIN

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வனத் துறை பணியாளா்களுக்கு ஆபத்துக் காலங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு வனத் துறையின் கீழ் இயங்கும் நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு, அந்தப் படை பிரிவின் உதவி வனப் பாதுகாவலா் மகேந்திரன் தலைமை வகித்து செயல்முறை விளக்கமும் பயிற்சியும் அளித்தாா். பணியாளா்கள் வனத்தில் ரோந்து செல்லும்போது, காட்டுத் தீயினால் ஏற்படும் திடீா் அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, காயமடைந்தவா்களுக்கு முதலுதவி, அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லுதல், வனக் குற்றங்களைத் தடுத்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டன. தெப்பக்காடு முகாமில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் வனச் சரக அலுவலா்கள், வனவா்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT