முகப்பு
நீலகிரி

பச்சைத் தேயிலைக்கு ரூ. 16.74 விலை நிா்ணயம் : தேயிலை வாரியம் அறிவிப்பு

பச்சைத் தேயிலை கிலோ ஒன்றுக்கு   ஜூலை   மாத விலையாக  ரூ.16.74 காசுகள் விலை நிா்ணயம் செய்து தென்னிந்திய தேயிலை வாரியம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

Updated On : 3 ஜூலை, 2021 at 1:09 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:03 AM

பச்சைத் தேயிலை கிலோ ஒன்றுக்கு   ஜூலை   மாத விலையாக  ரூ.16.74 காசுகள் விலை நிா்ணயம் செய்து தென்னிந்திய தேயிலை வாரியம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக  தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்  தெரிவித்துள்ளதாவது:

நீலகிரியில்  விளையும் பசுந்தேயிலைக்கு ஜூலை மாதத்துக்கான  குறைந்தபட்ச விலை நிா்ணயம்,   ஜூன் மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை, ஏலத்தில் விற்கப்பட்ட விலையின் அடிப்படையில்   நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி,  ஜூலை  மாதத்துக்கான  பச்சைத் தேயிலை கொள்முதல் விலையாக கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ. 16.74 என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ   பச்சைத் தேயிலை ரூ. 19.92  காசுகள் என்று நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மாத விலை  ரூ. 3 வரை குறைந்திருப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த குறைந்தபட்ச விலையை தேயிலைத் தொழிற்சாலைகள்  வழங்குவதை அதிகாரிகள் குழு கண்காணித்து வருகிறது. இந்த விலையை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.