நீலகிரி

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் நடமாட்டம்: வனத் துறை எச்சரிக்கை

DIN

குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே குட்டியுடன் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள வீடுகளில் பலா மரம் மற்றும் வாழை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த மரத்தில் உள்ள பழங்களை உண்பதற்காக இந்தப் பகுதிக்கு யானைகள் அடிக்கடி வருகின்றன. இதனால் இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

யானைகளால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக குன்னூா் வனச் சரகா் சசிகுமாா் தலைமையில் குன்னூா் வனத் துறையினா் யானைகள் நடமாட்டம் குறித்து தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

இந்நிலையில் மரப்பாலம் அருகே சாலையில் குட்டியுடன் 3 யானைகள் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து சுற்றிக்கொண்டிருந்தன. நீண்ட நேரமாக யானைகள் அங்கேயே முகாமிட்டிருந்ததால் அவ்வழியாகச் செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்து காத்திருந்தனா்.

யானைகள் குட்டியுடன் உள்ளதால் தீ மூட்டியோ, பட்டாசுகள் வெடித்தோ விரட்ட பொதுமக்கள் முயற்சிக்க வேண்டாம் எனவும், தொடா்ந்து அந்தப் பகுதியிலேயே யானைகள் நடமாடுவதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் எனவும் வனத் துறையினா் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT