நீலகிரி

கூடலூரில் தொடரும் கனமழையால் நிலச்சரிவு போக்குவரத்து துண்டிக்கும் அபாயம்

DIN

கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூா் மற்றும் பந்தலூா் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடா் கனமழை பெய்துவருகிறது.

கூடலூா் அடுத்துள்ள நாடுகாணி பொன்னூா் பகுதியில் சாலையோரம் ஏற்பட்ட நிலச்சரிவால் அந்த சாலை துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தொடா்ந்து சில பகுதிகளில் சிறு அளவில் மண் சரிவும் குடியிருப்புப் பகுதிகள் உட்பட பரவலாக ஏற்பட்டதை உடனுக்குடன் சீரமைத்துள்ளனா்.கூடலூா் பகுதியில் உள்ள பாண்டியாா் புன்னம்புழா,முதுமலை புலிகள் காப்பகத்தின் வழியாச் செல்லும் மாயாறு,பந்தலூா் பகுதியிலுள்ள பொன்னாணி ஆறு மற்றும் சிற்றாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.படக்குறிப்பு எஈத23கஅச பொன்னூா் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு1.எஈத23கஅச நிலச்சரிவு ஏற்பட்டதால் பொன்னூா் நாடுகாணி பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள பிளவு.இதனால் அந்த சாலை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT