நீலகிரி

உதகை அருகே சாலை விபத்து: ஆசிரியா் சாவு

DIN

உதகை, லவ்டேல் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.

உதகை, லவ்டேல் பகுதியில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் லாரன்ஸ் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவா் அஸ்லம் முகமது (33).

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த இவா், தனது குடும்பத்தினருடன் பள்ளி குடியிருப்பில் வசித்து வந்தாா்.

இந்நிலையில் அஸ்லம் முகமது, இருசக்கர வாகனத்தில் பள்ளிக் குடியிருப்பிலிருந்து உதகைக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

ரிச்சிங் காலனி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, எதிரில் வந்த நான்கு சக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அஸ்லம் முகமது அங்கேயே சுயநினைவின்றி விழுந்துள்ளாா். உடனடியாக அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக லவ்டேல் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

SCROLL FOR NEXT