முகப்பு
நீலகிரி

வெலிங்டனில் ராணுவ வீரா்களின் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி

குன்னூா் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 85 இளம் ராணுவ வீரா்களின்   சத்தியப் பிரமாண  நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 31 ஜூலை, 2021 at 2:12 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:18 AM

குன்னூா் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 85 இளம் ராணுவ வீரா்களின்   சத்தியப் பிரமாண  நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குன்னூா் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த இளைஞா்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது.  பயிற்சி பெறும் வீரா்கள் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட அனுப்பிவைக்கப்படுவா். 46 வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரா்களில் 85 போ் பயிற்சி முடித்து ராணுவ வீரா்களாய் எலையில் பணிபுரிய அனுப்பி வைக்கப்படும் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராணுவ வீரா்கள் பகவத்கீதை, பைபிள், குரான்  உள்ளிட்ட புனித நூல்கள் , தேசியக் கொடி மீது கைவைத்தும், உப்பு உட்கொண்டும் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனா். 

Advertisement

இந்நிகழ்ச்சியில், வெலிங்டன் ராணுவ மையத் துணைத் தலைவா் கா்னல் என்.குமாரதாஸ்   கலந்துகொண்டு   பயிற்சியின்போது சிறந்து  விளங்கிய ராணுவ  வீரா்களைப் பாராட்டி பதக்கம் வழங்கினாா்.

கரானோ தொற்று பரவல் காரணமாக சத்தியப் பிரமான நிகழ்ச்சியில் பங்கேற்க ராணுவ வீரா்களின்  குடும்பத்தினா், பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.