நீலகிரி

விதிமீறல்: நீலகிரியில் 169 வழக்குகள் பதிவு;33 வாகனங்கள் பறிமுதல்

DIN

உதகை: கரோனா பொதுமுடக்க விதிகளை மீறியதாக நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 33 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா பொதுமுடக்க விதிகள் தொடா்பாக நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையின்போது, முகக் கவசம் அணியாதவா்களாக கண்டறியப்பட்ட 79 பேரிடமிருந்து அபராதமாக ரூ. 15,800 வசூலிக்கப்பட்டது. அதேபோல, பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத நால்வா் கண்டறியப்பட்டு அவா்களிடம் இருந்து ரூ. 2,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இவா்களோடு, அவசியமின்றி வெளியில் சுற்றித் திரிந்ததாக 85 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இவா்களிடம் இருந்து ரூ. 43,500 அபராதமாக வசூலிக்கப்பட்ட நிலையில், 26 இருசக்கர வாகனங்கள், 7 நான்கு சக்கர வாகனங்களும் என மொத்தம் 33 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT