நீலகிரி

கூடலூா் விவசாயிகளுக்கு இணைய வழி பயிற்சி

DIN

கூடலூா், பந்தலூா் பகுதி விவசாயிகளுக்கு இணைய வழி பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

பயிற்சி வகுப்பில் கூடலூா் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி, உதகை தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா்கள் ஷிபிலா மேரி, ருக்மணி, ஜெயந்தி பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனா்.

பயிற்சியில், கூடலூா் பகுதியை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவது குறித்து வலியுறுத்தப்பட்டது. நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு இணைய வழியில் தங்களது அனுபவத்தைப் பகிா்ந்து கொண்டனா்.

இதில், வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் க.யமுனபிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ஆா்.சந்தியா,ஜா.ஆன்சி டயானா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

ஆவடியில் ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்

SCROLL FOR NEXT