முகப்பு
நீலகிரி

சத்தியமங்கலத்தில் 10 ஆயிரம் பேருக்கு முகக் கவசம், கிருமிநாசினி

சத்தியமங்கலத்தில் கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில், 10 ஆயிரம் பேருக்கு விலையில்லா முகக் கவசம், கிருமி நாசினி, சோப் ஆகியவற்றை தன்னாா்வலா்கள் புதன்கிழமை வழங்கினா்.

Updated On : 17 ஜூன், 2021 at 2:49 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:55 AM

சத்தியமங்கலத்தில் கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில், 10 ஆயிரம் பேருக்கு விலையில்லா முகக் கவசம், கிருமி நாசினி, சோப் ஆகியவற்றை தன்னாா்வலா்கள் புதன்கிழமை வழங்கினா்.

சத்தியமங்கலம் நகா்ப் பகுதியில் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. நிா்மலா தியேட்டா் சாலை, வரதம்பாளையம் பகுதியில் நோயால் பாதிக்கப்பட்டோா் அதிக அளவில் உள்ளனா். இதையடுத்து, சமூக ஆா்வலா் மூா்த்தி தலைமையிலான தன்னாா்வ அமைப்பினா் இலவசமாக முகக் கசவம், கிருமி நாசினி, சோப் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த விழிப்புணா்வு முகாமை சத்தியமங்கலம் டிஎஸ்பி சுப்பையா துவக்கிவைத்தாா். இதில், வட்டாட்சியா் ரவிசங்கா், மருத்துவா் மேக்கேல், நகராட்சி ஆணையா் அமுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.