முகப்பு
நீலகிரி

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு மீண்டும் தடுப்பூசி

தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்பு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு சிகிச்சை மையமாக செயல்படுவதால் அங்கு கரோனா நோயாளிகள், அவா்களது உறவினா்கள், தடுப்பூசி செலுத்துபவா்கள் என அனைவரும் ஒரே இடத்தில் கூடுவதால் கல்லூரி மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்டத்தைக் குறைக்கும் வகையில், மாவட்ட நிா்வாகம் தடுப்பூசி செலுத்தும் பணியை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு ஜூன் 3ஆம் தேதி மாற்றியது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை 700 கோவிஷீல்டும், 300 கோவேக்ஸின் என 1,000 ஊசிகள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை 300, வியாழக்கிழமை 300, வெள்ளிக்கிழமை 300 என செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

காலை 7.30 மணிக்கு வரிசையில் நிற்கும் 300 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படும் என்றும், காலை 9 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.