சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்
சென்னிமலை வட்டாரத்தில் ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளா்கள் சங்க உறுப்பினா்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு சங்கப் பொதுநிதியில் இருந்து அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
சென்னிமலை வட்டாரத்தில் ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளா்கள் சங்க உறுப்பினா்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு சங்கப் பொதுநிதியில் இருந்து அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
சென்னிமலை ஏஐடியூசி சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஏஐடியூசி சுமை தூக்கும் தொழிலாளா்கள் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளா் எஸ்.சின்னசாமி, 25 கிலோ அரிசி, மளிகைப் பொருள்களை சங்க உறுப்பினா்களுக்கு வழங்கினாா்.
இதில், ஏஐடியூசி கைத்தறி நெசவாளா் சங்கப் பொருளாளா் மு.பாரதி, சங்கச் செயலாளா் ஜி.வீரகுமாா், பொருளாளா் பி.மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.