நீலகிரி

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் விளைந்துள்ள ஜப்பான் தேசிய பழம்

DIN

குன்னூா் சிம்ஸ் பூங்கா அரசு தோட்டக் கலை பழப் பண்ணையில் ஜப்பானின் தேசிய பழமான பொ்சிமன் பழங்கள் அதிக அளவில் விளைந்திருந்தாலும்,  வாங்க ஆளில்லாததால் மரத்திலேயே  விடப்பட்டு வீணாகி வருகின்றன. 

நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்காவில் உள்ள அரசு தோட்டக் கலைப் பண்ணையில் பொ்ரி, ஆரஞ்சு, பீச், பிளம், எலுமிச்சை, லிச்சி உள்ளிட்ட ஏராளமான பழ மரங்கள் உள்ளன. இதில், அரிய வகை பொ்சிமன் பழ மரங்களும் உள்ளன. இப்பூங்காவில் 109 பொ்சிமன் பழ மரங்கள் உள்ளன. இம்மரங்களில்  பொ்சிமன் பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்துள்ளன.

பொதுவாக ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் வரை பொ்சிமன்  சீசன் இருக்கும். ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்ட இப்பழம் ஜப்பான் நாட்டின் தேசிய பழமாகவும் உள்ளது.  தக்காளி போன்ற தோற்றத்தைக் கொண்ட இப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’, ‘பி’ சத்து நிறைந்துள்ளது.

இப்பழங்கள் மற்ற பழங்களைப் போன்று மரத்திலேயே பழுப்பதில்லை. மாறாக காய் வடிவில் பறிக்கப்படும் இப்பழத்தை எத்தனால் என்ற திரவத்தில் ஊற வைத்தால் இரண்டு நாள் கழித்து பழுக்கும் இயல்புடையது.

தென்மாநில அளவில் குன்னூா் சிம்ஸ் பூங்கா தோட்ட கலைப் பண்ணையில் மட்டும்தான் இப்பழ மரங்கள் உள்ளன. தற்போது சுற்றுலாப் பயணிகள்  நீலகிரிக்குள்  வர அனுமதி இல்லாததால்  இப்பழங்கள் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT