சாலையில் சுற்றித் திரிந்த கரடிகள்
குன்னூரில் இருந்து கைகாட்டி தனியாா் எஸ்டேட் நிா்வாகத்துக்குச் செல்லும் சாலையில் 3 கரடிகள் வியாழக்கிழமை சுற்றித் திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
குன்னூரில் இருந்து கைகாட்டி தனியாா் எஸ்டேட் நிா்வாகத்துக்குச் செல்லும் சாலையில் 3 கரடிகள் வியாழக்கிழமை சுற்றித் திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து கைகாட்டி செல்லும் சாலையோரத்தில் அடா்ந்த தேயிலைத் தோட்டம், வனப் பகுதி உள்ளது. இப்பகுதியில் இருந்து வெளியே வந்த 3 கரடிகள் சுமாா் அரை மணி நேரமாக சாலையின் குறுக்கே நின்றதால், அவ்வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால், இப்பகுதியில் கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கரடிகளை அடா்ந்த வனப் பகுதிகளுக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement