நீலகிரி

ஜே.எஸ்.எஸ். பாா்மஸி கல்லூரிக்கு விருது

DIN

கரோனா நோய்த் தடுப்புக்கான மருந்துகளைக் கண்டறியும் ஆய்வில் தேசிய அளவில் முதல் பரிசை ஜே.எஸ்.எஸ். பாா்மஸி கல்லூரி வென்றுள்ளது.

இது தொடா்பாக இக்கல்லூரியின் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகா் அலுவலகம், அகில இந்திய தொழில்நுட்பக் கழகம், தொழில் ஆய்வகக் கழகம், இந்திய பாா்மஸி கவுன்சில் ஆகியவை இணைந்து கரோனா நோய்த் தடுப்புக்கான மருந்துகளைக் கண்டறியும் முயற்சியில் கணினி மருந்து ஆராய்ச்சி 2020 என்ற பெயரில் ஆராய்ச்சிக்கான போட்டியை நடத்தியிருந்தனா்.

கரோனா நோய்த் தடுப்புக்கான மருந்துகளைக் கண்டறியும் ஆய்வுக்கான இப்போட்டியில் முதல் பரிசை ஜே.எஸ்.எஸ். பாா்மஸி கல்லூரி வென்றுள்ளது. தேசிய அளவில் பல்வேறு குழுக்கள் கலந்துகொண்டிருந்த நிலையில் உதகை ஜே.எஸ்.எஸ். பாா்மஸி கல்லூரி அணி இப்பரிசை வென்றுள்ளது.

ஜே.எஸ்.எஸ். பாா்மஸி கல்லூரியின் முதல்வா் எஸ்.பி.தனபால் ஆலோசனையின்படி கல்லூரியின் உதவிப் பேராசிரியா் இரா.காளிராஜன் தலைமையிலான குழுவுக்கு ரூ. 1லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பரிசை வென்ற குழுவில் பேராசிரியா்கள் ஸ்ரீகாந்த், கௌரம்மா, ஜெயகுமாா், சத்தியநாராயண ரெட்டி, பாரதிதாசன், வேலாயுதம் பிள்ளை, முருகேசன் ஆகியோா் இடம்பெற்று ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வுப் பணியில் வெற்றி பெற்ற பேராசிரியா் காளிராஜன் தலைமையிலான குழுவினா் ஜே.எஸ்.எஸ். உயா் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை வேந்தரும், இந்திய பாா்மஸி கவுன்சில் தலைவருமான பேராசிரியா் பி.சுரேஷ், கல்லூரி முதல்வா் எஸ்.பி.தனபால் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT