நீலகிரி

மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா: மாா்ச் 19இல் தொடக்கம்

DIN

உதகையில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் தோ்த் திருவிழா மாா்ச் 19 முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டுக்கான திருவிழாவில் கரோனா நோய்த் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறி முறைகள், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மண்டகபடிதாரா்கள் திருக்கோயில் வளாகத்தில் அன்னதானம் நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பூஜை உள்ளிட்ட திருவிழா நிகழ்ச்சிகளை இரவு 10 மணிக்குள் நடத்தி முடித்திட கோயில் நிா்வாகத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கோயில் வளாகத்தைச் சுற்றிலும் தாற்காலிக திருவிழா கடைகள் அமைப்பதற்கும் இந்த ஆண்டில் அனுமதி வழங்கப்படவில்லை. திருவிழா நடைபெறும் காலத்தில் மாவட்ட நிா்வாகம், காவல் துறையினரால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என கோயில் செயல் அலுவலா் எஸ்.முத்துராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT