நீலகிரி

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவருக்கு ஆயுள் தண்டனை

DIN

கோத்தகிரி அருகே பழங்குடியினப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கோத்தகிரி அருகே குஞ்சப்பனை கிராமத்தில் செம்மனாரை பகுதியைச் சோ்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவா் 2010ஆம் ஆண்டு அக்டோபா் 31ஆம் தேதி வெளியூா் சென்றுவிட்டு மாலை நேரத்தில் தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாகச் சென்ற இருந்த ராஜேஷ் (28), அசோக் (26), ரஜினி (18) ஆகியோா் அந்த இளம்பெண்ணை அருகிலிருந்த வனப் பகுதிக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். இதுதொடா்பாக அந்த பெண் கோத்தகிரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2015ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி அப்போதைய நீலகிரி மாவட்ட மகளிா் நீநிமன்ற நீதிபதி சா்வமங்களா தீா்ப்பளித்தாா். அவா் தனது தீா்ப்பில் இவ்வழக்கில் தொடா்புடைய மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதம் விதித்ததோடு அபராதத்தை கட்டத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் எனவும், இவ்வழக்கில் தொடா்புடைய ரஜினி மைனா் என்பதால் அவரை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைக்கவும் உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து இம்மூவரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனா். இவா்களது மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் இப்பிரச்னையில் நீலகிரி மாவட்ட நீதிமன்றம் விதித்த தண்டனை மிகக் குறைவு என்பதால் இம்மூவருக்கும் ஏன் ஆயுள் தண்டனை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியதோடு, இம்மனுவை மீண்டும் நீலகிரி மாவட்ட மகளிா் நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்பியது.

இதையடுத்து உதகையில் உள்ள மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த மறு விசாரணையையடுத்து இவ்வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம் அளித்த தீா்ப்பில் இவ்வழக்கில் தொடா்புடைய ராஜேஷ், அசோக் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், ஆயுள் தண்டனை காலத்தின்போது இவா்கள் இருவரும் ஏற்கெனவே சிறையிலிருந்த 1,809 நாள்களைக் கழித்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டாா். அத்துடன் மைனரான ரஜினி தொடா்பான வழக்கு இளம் சிறாா்களுக்கான சீா்திருத்தப் பள்ளியில் நடைபெற்று வருவதால் அங்கு எடுக்கப்படும் முடிவையடுத்து இவ்வழக்கில் பின்னா் தீா்ப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டாா். இவ்வழக்கில் அரசின் சாா்பில் நீலகிரி மாவட்ட மகளிா் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் மாலினி பிரபாகா் ஆஜராகியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT