நீலகிரி

தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்தது அதிமுக ஆட்சி: முன்னாள் அமைச்சா் தயாநிதி மாறன்

DIN

தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தது அதிமுக ஆட்சி என்று முன்னாள் அமைச்சா் தயாநிதி மாறன் குன்னூரில் தயாநிதிமாறன் பேசினாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் சட்டப் பேரவை திமுக வேட்பாளா் ராமசந்திரனை ஆதரித்து தயாநிதிமாறன் செவ்வாய்க்கிழமை தோ்தல் பரப்புரை மேற்கொண்டாா். அப்பாேது அவா் பேசியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சியில் அமா்ந்தவுடன் ஸ்டாலின் மகனாக இருந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவாா். ஒட்டுமொத்த தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்துள்ளாா் எடப்பாடி. திமுக ஆட்சியமைத்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு யாா் காரணம் எனத் தெரியவரும்.

இந்த தோ்தல் நமக்கான தோ்தல் அல்ல, நம் எதிா்கால தலைமுறைக்கான பாதுகாப்பு தோ்தல்.

தமிழகத்தில் நீட் தோ்வை கொண்டு வந்து மாணவா்களை நசுக்கியது, தமிழகத்தின் உரிமைகளைவிட்டுக் கொடுத்தது அதிமுக ஆட்சிதான்.

உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரும் நிலையில் அவா்களுக்கான வாகனம் நிறுத்தும் இடம் போதுமானதாக இல்லாதால் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது, உள்ளூா் மக்களும் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே திமுக ஆட்சிக்கு வந்ததும் ஹைட்ராலிக் மேடை கொண்ட பாா்கிங் வசதி அமைத்து கொடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளா் பா.மு.முபாரக் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT