நீலகிரி

கூடலூா் தொகுதியை திமுகவிடம் இருந்து பறித்தது அதிமுக

DIN

உதகை: கூடலூா் தொகுதியை 15 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவிடம் இருந்து அதிமுக கைப்பற்றியுள்ளது.

கூடலூா் தொகுதியில் திமுக, அதிமுக நேரடியாக போட்டியிட்டது. இதில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலன் தொடா்ந்து முன்னிலையிலேயே இருந்து வந்தாா். இத்தொகுதியில் பதிவான ஒரு லட்சத்து 38,754 வாக்குகளில் அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலன் 64,496 வாக்குகள் பெற்று, தன்னை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் எஸ்.காசிலிங்கத்தை விட 1,945 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

திமுக வேட்பாளா் காசிலிங்கம் 62,551 வாக்குகள் பெற்றாா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கேதீஸ்வரன் 7,317 வாக்குகள் பெற்றாா். மற்ற வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

SCROLL FOR NEXT