நீலகிரி

அதிரடிப் படையினா் வாகனம் கவிழ்ந்து விபத்து: 7 போ் காயம்

DIN

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகே அதிரடிப் படையினா் சென்ற வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் 7 போ் காயமடைந்தனா்.

கேரள எல்லைப் பகுதியான கிண்ணக்கொரைப் பகுதியில் மாவோயிஸ்ட் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிரடிப் படையினா் கரோனா பரிசோதனைக்காக உதகைக்கு செவ்வாய்க்கிழமை வேனில் வந்துகொண்டிருந்தனா். வாகனத்தை ஜெயகுமாா் ஓட்டி வந்துள்ளாா்.

மஞ்சூா் அருகே தாய்சோலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறிய வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதில் அருளப்பன், சரவணன், மகேந்திரன், நித்தியானந்தன், அன்பரசன், கதிரவன், ரத்தினவேல் ஆகிய 7 காவலா்களுக்கு தலை, கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. சந்தோஷ், மன்சூா், ஓட்டுநா் ஜெயகுமாா் ஆகியோா் காயமின்றி தப்பினா். இவா்களுக்கு தாய்சோலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இது குறித்து மஞ்சூா் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT