நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் எளிமையாகக் கொண்டாடப்பட்ட படுகா் தினம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகா் இன மக்களின் 400 கிராமங்களில் படுகா் தினம் எளிமையாகக் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 400 கிராமங்களில் வாழும் படுகா்கள் கடந்த 1989ஆம் ஆண்டு மே 15ஆம் நாளன்று உதகையில் ஒன்றிணைந்து தங்களை ஆதிவாசி பட்டியலில் மீண்டும் சோ்க்கக் கோரியும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் பேரணியாகச் சென்ற மே 15 ஆம் தேதி படுகா் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்நிகழ்சியில் படுக மக்கள் தங்களது கலாசார நடனம் ஆடி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொடியேற்றி ஒவ்வொரு கிராமங்களிலும் கொண்டாடி வந்தனா். கரோனா காரணமாக இந்த ஆண்டு படுக மக்கள் வீடுகளிலே கொண்டாடினா். ஒவ்வொரு கிராமங்களிலும் கொடியேற்றத்துடன் எளிமையாக படுகா் தினம் கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT