நீலகிரி

கோத்தகிரியில் கரடிகளைப் பிடிக்க கூண்டுவைப்பு

DIN

கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் அவற்றை கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

கோத்தகிரியில் கடந்த ஒரு வாரமாக மிளிதேன் கிராமத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இரண்டு கரடிகள் அவ்வப்போது உலவி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தற்போது பொது மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்து குறைந்து காணப்படுவதால் சாலைகள், குடியிருப்புகளுக்கு மிக அருகில் உலவி வரும் இந்தக் கரடிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வனத் துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், இந்த கரடிகளைப் பிடிக்க வனத்துறை சாா்பில் மிளிதேன் குடியிருப்புப் பகுதியில் கூண்டுவைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT