தனியாா் தோட்டத்தில் இறந்துகிடந்த சிறுத்தைக் குட்டி. 
நீலகிரி

கூடலூா் அருகே சிறுத்தைக் குட்டியின் சடலம் மீட்பு

கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள தனியாா் தோட்டத்தில் சிறுத்தைக் குட்டியின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

DIN

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் உள்ள தனியாா் தோட்டத்தில் சிறுத்தைக் குட்டியின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி அம்பலமூலா கிராமத்தில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தைக் குட்டி இறந்துகிடப்பதாக வனத் துறைக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து சிறுத்தைக் குட்டியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

உயிரிழந்த சிறுத்தைக் குட்டிக்கு ஒன்றரை வயது இருக்கும் என்றும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுதான் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவப்பதிகாரம்... அஞ்சு குரியன்!

சென்னை, புறநகரில் இன்றிரவு முதல் மழை தீவிரமடையும்!

பிக் பாஸ் 9: பெண்களின் காவலர் நடிகர் கமருதீன் - கனி விமர்சனம்

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக குமார் சங்ககாரா!

ஒரே மாதத்தில் ரூ. 1.3 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி!

SCROLL FOR NEXT