நீலகிரி

கோத்தகிரியில் மூடுபனி: வாகன ஓட்டிகள் அவதி

DIN

குன்னூா், கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில்  கடும் பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா்.

குன்னூா், கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக  பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், இப்பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கடும் பனிமூட்டம், குளிா் நிலவி வந்தது. தொடா்ந்து, சாரல்  மழை   பெய்தது. இதன் காரணமாக குளிரின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.

வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT