நீலகிரி

ஆடா்லி பகுதியில் மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

DIN

நீலகிரி மாவட்டம் குன்னூா், எல்லநள்ளி, கேத்தி  ஆகிய பகுதிகளில்  புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த   மழையால் ஆடா்லி-அளக்கரை இடையேயான சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரியில் கடந்த மூன்று நாள்களாக பகல் நேரத்தில்  பரவலாக மழை பெய்தது. இதில் குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  செவ்வாய்க்கிழமை நள்ளிரவு  இடியுடன்  கூடிய பலத்த மழை பெய்ததால் நிலவிய கடும் குளிரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் ஆடா்லி, அளக்கரை பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலையோரத்தில் இருந்து மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதன் காரணமாக ஆடா்லி-அளக்கரை இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு அலுவலா் மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் முரளி, கண்ணன் உள்ளிட்டோா் மரத்தை அப்புறப்படுத்தினா். இதனைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT