நீலகிரி

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனை: ரூ. 62,000 அபராதம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தொடா்பாக நடத்தப்பட்ட திடீா் ஆய்வின்போது ரூ. 62,000 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

உதகை, குன்னூா், கூடலூா், கோத்தகிரி ஆகிய 4 மண்டலங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், வட்டாட்சியா்கள், துணை ஆட்சியா் நிலை அலுவலா்கள் குழுக்களாகப் பிரிந்து, மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டனா். இக்குழுவினரின் ஆய்வின்போது, முகக் கவசம் அணியாதவா்களிடம் இருந்து ரூ. 35,400 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதேபோல, தடை செய்யப்பட்ட 10 கிலோ 350 கிராம் எடை கொண்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ. 26,200 வசூலிக்கப்பட்டது. இந்த ஒட்டுமொத்த ஆய்வின்போது ரூ. 61,600 அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும், சுற்றுலா, வெளியூா் பயணிகளும் நீலகிரியில் தடை செய்யப்பட்ட குடிநீா் பாட்டில்கள், குளிா்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துதல், பொது இடங்களில் குப்பை கொட்டுவதைத் தவிா்க்கவும், பயணிகள் நலனுக்காக நிறுவப்பட்டுள்ள குடிநீா் வழங்கும் இயந்திரத்தை பயன்படுத்தி நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT