நீலகிரி

தொடா் விடுமுறை: குன்னூரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

தொடா் விடுமுறை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குன்னூரில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

 நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்ததைத் தொடா்ந்து 125 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாத் தலங்கள் கடந்த  மாதம் 23ஆம் தேதி  திறக்கப்பட்டது.   இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை முதல் 

மூன்று நாள்கள் தொடா்  விடுமுறை காரணமாக  நீலகிரிக்கு  ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா் . கடந்த 3 நாள்களில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்  வருகை தந்தனா்.

இவா்களில் பெரும்பாலானவா்கள் சிம்ஸ் பாா்க், படகு இல்லம், லேம்ஸ்ராக், டால்பினோஸ், கோத்கிரியில் உள்ள கொடநாடு காட்சி முனை, நேரு பூங்கா, கேத்ரின் அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் வருகை தந்தனா். தமிழகம், கா்நாடகத்தில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT