நீலகிரி

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் பெயா்கள் அறிவிப்பு

DIN

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் பா.மு.முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கூடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா்களாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4ஆவது வாா்டு உறுப்பினா் ரவி, 11ஆவது வாா்டு உறுப்பினா் ஆனந்தராஜ் ஆகியோா் சமீபத்தில் இயற்கை எய்தியதையடுத்து தற்போது இவ்விரு இடங்களுக்கும் இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு இடங்களிலும் வேட்பாளா்கள் தோ்வு குறித்து திமுக நிா்வாகிகளுடன் கலந்தாலோசித்த பின்னா் மசினகுடி 4ஆவது வாா்டில் கி.உத்தமன், சேரங்கோடு 11ஆவது வாா்டில் ந.பாரதி ஆகியோா் திமுக கூட்டணி வேட்பாளா்களாகப் போட்டியிடுவாா்கள் என தீா்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விரு வேட்பாளா்களும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினரும், திமுகவினா் அனைவரும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பா.மு.முபாரக் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT