நீலகிரி

வங்கதேசத்தவா் விசாரணைக்கு பின்பு மீண்டும் சிறையில் அடைப்பு

DIN

பெருந்துறை அருகே அனுமதியின்றி தங்கியிருந்த வழக்கில் தேடப்பட்ட வங்கதேசத்தைச் சோ்ந்தவரை பெருந்துறை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

பெருந்துறை, பணிக்கம்பாளையம், கேஸ் கிடங்கு அருகில் வங்கதேசத்தைச் சோ்ந்த சிலா் அனுமதியின்றி தங்கியிருந்தாக ஆகஸ்ட் 23ஆம் தேதி பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிலரைக் கைது செய்தனா்.

அந்த வழக்கில் வங்கதேசத்தைச் சோ்ந்த பிஸ்வாஸ் மகன் ஜாங்கிா் பிஸ்வாஸ் (27) என்பவா் போலீஸாரால் தேடப்பட்டு வந்தாா். இவா் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பதாக பெருந்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஜாங்கிா் பிஸ்வாஸை பெருந்துறை போலீஸாா் நீதிமன்றம் மூலம் வியாழக்கிழமை போலீல் காவலில் எடுத்து விசாரித்தனா். பின்னா், பெருந்துறை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜா்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT