நீலகிரி

சாலையைக் கடக்கும் யானைகள்: எச்சரிக்கையுடன் செல்ல வனத் துறையினா் அறிவுறுத்தல்

DIN

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் அவ்வப்போது யானைகள் கடப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு  கடந்த வாரம்  வந்த   10 காட்டு யானைகள்  கல்லாறு, பா்லியாறு, ரன்னிமேடு பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீருக்காக  முகாமிட்டிருந்தன.  இவை தற்போது   கரும்பாலம், கிளன்டேல், ரன்னிமேடு போன்ற  பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையைக் கடக்கின்றன. குறிப்பாக காட்டேரி கரும்பாலம் பகுதியில் சாலையைக் கடந்து முக்கிய சாலைகளில் நடமாடும் சூழல் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT