நீலகிரி

மேலூா் அரசு தொடக்கப் பள்ளிக்கு விருது

DIN

குன்னூா் அருகே உள்ள மேலூா் ஒசஹட்டி அரசு தொடக்கப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டுள்ளது.

குன்னூா் அருகே உள்ள மேலூா் ஒசஹட்டி அரசு தொடக்கப் பள்ளயில் கடந்த சில ஆண்டுகளாக 30 பிள்ளைகள் மட்டுமே படித்து வந்த நிலையில், அப்பகுதி இளைஞா்கள், கல்வியாளா்கள் ஒன்றிணைந்து வித்யதீக்சா கல்வி அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி பள்ளியின் முன்னேற்றத்துக்கான செயல்களில் ஈடுபட்டு பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினா்.

மேலும், பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆதரவோடு அரசு உதவியுடன் குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்தனா். இந்த அறக்கட்டளை மூலமாக நான்கு ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா். இந்த வளா்ச்சியின் காரணமாக தற்போது இந்த அரசுப் பள்ளியில் 80 மாணவ, மாணவியா் படிக்கின்றனா்.

இதனை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த பள்ளிக்கான தமிழ்நாடு அரசு விருது இப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நசரூதீன் செவ்வாய்க்கிழமை கேடயம் வழங்கிப் பாராட்டினாா். தலைமையாசிரியா் சரோஜா, அறக்கட்டளையைச் சோ்ந்த தேவராஜ் ஆகியோா் கேடயத்தைப் பெற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT