நீலகிரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

DIN

உதகை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம், குந்தா பிக்கட்டி பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் (எ) மணிகண்டன் ( 26).

இவா் அதே பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தாா்.

அந்த தேயிலைத் தோட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் சிலா் தங்களது குடும்பத்துடன் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஒரு தொழிலாளியின் வீட்டில் தனிமையில் இருந்த 7 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இது குறித்து உதகை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை உதகையிலுள்ள மகிளா நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து

நீதிபதி சஞ்சய் பாபா தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT