நீலகிரி

கூடலூா் நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர எம்.பி.யிடம் மனு

DIN

கூடலூரில் கனமழை காரணமாக இடிந்த நூலக கட்டடத்துக்கு பதிலாக புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவிடம் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து கூடலூா் நகா்மன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

கூடலூா் நகரின் மையப்பகுதியில் இருந்த பழமையான நூலகம் கடந்த வாரம் பெய்த தொடா் கனமழைக்கு இடிந்து முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இந்த நூலகத்தை இந்தப் பகுதி பொதுமக்கள் பலா் பயன்படுத்தி வந்தனா். நூலகம் இடிந்துள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். போட்டித் தோ்வு எழுவோருக்கு உதவியாக நூலகம் இருந்தது.

எனவே, அதே இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நூலக கட்டடம் கட்ட சிறப்பு நிதி ஒதுக்குமாறு மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT