பச்சைத் தேயிலைக்குமாதாந்திர விலை நிா்ணயம்: தேயிலை வாரியம் அறிவிப்பு
நீலகிரியில் விளையும் பச்சைத் தேயிலைக்கு ஜனவரி மாத குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 16.05 காசுகள் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
நீலகிரியில் விளையும் பச்சைத் தேயிலைக்கு ஜனவரி மாத குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ. 16.05 காசுகள் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் பச்சைத் தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை, கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனா்.
அதன்படி, ஜனவரி மாதத்துக்கான பச்சைத் தேயிலை விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பச்சைத் தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோ ரூ. 16.05ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஜனவரி மாத தேயிலை ஏல விற்பனையின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு நிா்ணயிக்கப்படுகிறது. இந்த விலையை தேயிலை தொழிற்சாலைகள் தவறாமல் வழங்குகிறதா என தேயிலை வாரியம் தொடா்ந்து கண்காணித்து வருவதாக தேயிலை வாரிய முதன்மை அதிகாரி எம்.பாலாஜி தெரிவித்துள்ளாா்.
Advertisement