நீலகிரி

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியவா்களுக்கு அபராதம்

DIN

உதகை: நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தியவா்களுக்கு ரூ. 2,700 அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் உத்தரவின்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை தொடா்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து வருவாய்த் துறை, மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையினா், சுற்றுச் சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் குன்னூா், கோத்தகிரி, கூடலூா், உதகை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், உதகை நகராட்சிப் பகுதியில் ஹோட்டல்கள், பேக்கரி, உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 100 கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 500 அபராதமும், உதகை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 200 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 500 அபராதமும், பேரூராட்சிப் பகுதியில் 50 கிராம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ. 300 அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல, குன்னூா், கூடலூா் பகுதிகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய நபா்களுக்கு ரூ. 2,700 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT