முகப்பு
நீலகிரி

கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ

நீலகிரி மாவட்டம், கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மருந்துகள் அடிக்கிவைப்பட்டிருந்த அறையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 26 பிப்ரவரி, 2022 at 2:37 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:01 PM

நீலகிரி மாவட்டம், கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மருந்துகள் அடிக்கிவைப்பட்டிருந்த அறையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மருந்துகள் அடிக்கிவைப்பட்டிருந்த அறையில் இருந்து அதிகாலை  புகை வெளியேறியுள்ளது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு  நிலைய அலுவலா் மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை முற்றிலுமாக அணைத்தனா். இதன் காரணமாக பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் மருந்துப் பாட்டில்கள், மாத்திரைகள் எரிந்து சேதமாகின.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்டதா என்பது குறித்து கேத்தி காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.