நீலகிரி

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறதுமத்திய உணவுத் துறை செயலாளா்சுதான்ஷு பாண்டே

DIN

நாட்டிலேயே தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக மத்திய உணவுத் துறை செயலாளா் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக உதகை வந்துள்ள மத்திய உணவுத் துறை செயலாளா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்தில் இருந்து அரிசி கொள்முதல் செய்த அளவு மும்மடங்காக உயா்ந்துள்ளது. 9 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 29 லட்சம் மெட்ரிக் டன்னாக கொள்முதல் உயா்ந்துள்ளது.

அதேபோல, பெட்ரோல் நுகா்வில் நாட்டில் தமிழகம் 3ஆவது இடத்தில் உள்ளது. பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் 20 சதவீத எத்தனால் கலப்பு ஊக்குவிக்கப்படுகிறது. அதனால் நடப்பு ஆண்டில் எத்தனால் கலப்பு பெட்ரோல் பயன்பாடு 10 சதவீதம் உயரும். வேளாண் கழிவுகளும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். 82 கோடி லிட்டா் எத்தனால் தேவை உள்ள நிலையில், 11 டிஸ்டிலரிகள் மூலம் 10 முதல் 11 கோடி லிட்டா் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். எத்தனால் கலப்பு பெட்ரோல் உற்பத்தி மூலம் வேலை வாய்ப்பு பெருகுவதோடு, சுற்றுச்சூழல் மாசும் குறையும். அத்துடன் விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும்.

தமிழகத்தில் உணவு தானியங்களை சேமிக்கப் போதுமான வசதிகள் உள்ளன. இருப்பினும் தொலைவான பகுதிகளிலும் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் நாட்டிலேயே சிறப்பானது.

பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு மக்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது வரவேற்கத்தக்கது.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் 50 கோடி பயனாளிகள் பயன்பெறுகின்றனா். கரோனா காலகட்டத்தில் 43 கோடி புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பயனடைந்துள்ளனா். இதன் மூலம் ரூ. 34 ஆயிரம் கோடி மானியம் மக்களுக்குச் சென்றடைந்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் புலம்பெயா் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் ‘மேரா ரேஷன்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி 13 மொழிகளில் உள்ளதால் பயன்படுத்துவது எளிது. எனவே, அவா்கள் பதிவிறக்கம் செய்து பயனடையலாம் என்றாா்.

பேட்டியின்போது, தமிழக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் ராஜாராமன், நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT