நீலகிரி

ஒரே நேரத்தில் உலவிய சிறுத்தைகள், கரடிகள்

DIN

 நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள கரிமறா கிராமத்தை சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு சிறுத்தைகள், மூன்று கரடிகள் உலவி வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள கரிமறா கிராமத்தைச் சுற்றிலும் வள்ளுவா் நகா், வாசுகி நகா், பெரியாா் நகா், வசம்பள்ளம் உள்ளிட்டப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதியில் அண்மைக் காலமாக கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட

வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்நிலையில் இரவு நேரத்தில் இப்பகுதியில் இரண்டு சிறுத்தைகளும்,

அதனைத் தொடா்ந்து மூன்று கரடிகளும் நடமாடியது.

அங்குள்ள பிரகாஷ் முத்து என்பவரின் பங்களாவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாளுக்குநாள் இப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வனத் துறையினா் சிறுத்தை, கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிகள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT