நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு புதிய மோப்ப நாய் வரவழைப்பு

DIN

முதுமலை புலிகள் காப்பகத்துக்குப் புதிய மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது.

வனக் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் இருந்த மோப்ப நாய் இறந்துவிட்டது. தற்போது புதிதாக டைகா் என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள மோப்ப நாய்களுக்கான பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற ஜொ்மன் ஷெப்பா்டு வகையைச் சாா்ந்த நாய் கடந்த நவம்பா் 24ஆம் தேதி பணி அமா்த்தப்பட்டது.

இந்த மோப்ப நாய்க்கு தெப்பக்காடு வனச் சரகத்தில் தனி குடியிருப்பு அளிக்கப்பட்டு, அதன் அருகிலேயே பயிற்சியாளா் வடிேலுக்கும் வீடு வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பணி அமா்த்தப்பட்ட நாளிலிருந்து பயிற்சிகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

களப் பணிக்காக இதுவரை வெளியே கொண்டு செல்லப்படவில்லை. தற்போது பயிற்சியாளரின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கிறது. விரைவில் களப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள இந்த டைகருக்கு தற்போது ஒன்றரை வயதாகிறது. சுமாா் 12 வயது வரை பணியில் ஈடுபடுத்தப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூதாட்டியிடம் நகை பறிப்பு: மூவா் மீது வழக்கு

காா், லாரி மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

போக்ஸோ வழக்கில் பேருந்து நடத்துநருக்கு 20 ஆண்டுகள் சிறை

சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவன்: தாயாருக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம்

SCROLL FOR NEXT