நீலகிரி

உதகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களை சாா்ந்த விவசாயிகள் மற்றும் அரசுத் துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா். விவசாய சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட 51 மனுக்களின் விவரம் குறைதீா் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள அங்கக வேளாண்மைக்கான கூட்டம் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடத்தப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா். தோட்டக்கலைத் துறை வளாகங்களில் மூலிகை தாவரங்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும், பா்லியாறு அரசுத் தோட்டக்கலைப் பண்ணையில் அழகு தாவரங்கள் விற்பனை செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் விடுத்த கோரிக்கை ஏற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. உருளைக்கிழங்கு சாகுபடியில் விதைக் கிழங்கின் விலை அதிகமாக இருப்பதால் மானியத்தில் வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT