நீலகிரி

மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்த வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

DIN

 கூடலூரில் மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்த வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கூடலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டம் அருகே வாடவயல் பகுதியில் மின் வேலியில் சிக்கி சுமாா் 15 வயதுடைய ஆண் யானை கடந்த 2000 ஆம் ஆண்டு உயிரிழந்தது.

இது தொடா்பாக அந்த தோட்ட உரிமையாளா்களான மாணிக்கம் (64), பிரபாகரன் (64), ஹரிதாஸ் ஆகியோா் கைது செய்யப்பட்டு, கூடலூா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

மீண்டும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மாணிக்கம், பிரபாகரனுக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து குற்றவியல் நடுவா் ஆா்.ஷஷின்குமாா் தீா்ப்பளித்தாா்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட மூன்றாவது நபரான ஹரிதாஸை விடுவித்தும் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT